2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

ஐந்து நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட செயலகப் பண்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் தெரிவுசெய்யப்பட்ட 5 நூல்களின்  வெளியீட்டு விழா திங்கட்கிழமை (7) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் த.உருத்திரா எழுதிய ஆண்கோணி, காத்தான்குடி ரஹீம் எழுதிய சிவப்பு இரவு, தங்கன் எழுதிய தூண்டில், திருமதி இந்திராணி புஸ்பராஜா எழுதிய குயில் குஞ்சுகள் ஆகிய நூல்களும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் சிறுகதை, கவிதை, நாடகம், ஓவியம் ஆகிய படைப்புகளை மலர்ச்செல்வன் தொகுத்த சிறகுவிரி நூலும் இதன்போது வெளியிடப்பட்டன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்டவர்களது படைப்புகளை நூலாக்கம் செய்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழே மேற்படி ஐந்து நூல்களும் வெளியிடப்பட்டன. 

இவற்றுக்கான விமர்சன உரைகளை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவி திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், கவிஞர் வாசுதேவன், கவிதாயினி மலரா என்ற புனைப்யெருடைய  கலாநிதி புஸ்பலதா, எழுத்தாயினி மண்டூர் அசோகா, கவிஞர் மேரா ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.எல்.விக்கிரமராட்சி, மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.













You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X