2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'மகுடபங்கம்' நாடக நூல் வெளியீடு

Super User   / 2014 மார்ச் 30 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.குகன்)


கிளிநொச்சி, மலையாளபுரத்தைச் சேர்ந்த மூத்த நாடகவியலாளர் சி.வ.ஏழுமலைப்பிள்ளையின் 'மகுடபங்கம்' நாடக நூல் வெளியீடு கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பாரதி வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

கவேரி கலாமன்ற இயக்குநர் எஸ்.யோசுவா அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   நாடக நூலினை கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் வெளியிட்டதுடன், முதற்பிரதியினை கிளிநொச்சி மலையாளபுர கிராம அலுவலகர் ம.சந்திரபாலன் பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான ஆய்வுரையினை கிளிநொச்சி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் மா.அருட்சந்திரன் நிகழ்த்தினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X