2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'உள்ளும் வெளியும்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


சு.குணேஸ்வரன் எழுதிய 'உள்ளும் வெளியும்' என்னும் நூல் வெளியீட்டு விழா வடமராட்சி தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. 

மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் லெனின்மதிவானம் நூலினை வெளியிட்டு வைக்க கலாபூசணம் க.எதிர்வீரசிங்கம் முதற்பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.

நூலின் வெளியீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும், மதிப்பீட்டுரையை எழுத்தாளர் வி.கருணாகரனும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன்,

'தமிழிலக்கியத்தில் ஆறாவது திணையாக விளங்கும் பனியும் பனிசார்ந்த பிரதேசத்தில் உருவாகிய இவ் இலக்கியங்கள் குறித்தும் குணேஸ்வரனின் தேடல்கள் குறித்து இந்த நூல் இன்று மலர்ந்திருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் இன்றைய உலகில் 100 நாடுகளில் வாழ்கின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் ஆறாவது திணையாக புலம்பெயர் இலக்கியங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். வெளிநாடுகளிலுள்ள வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் கலாசாரம் மற்றும் அவர்களின் வாழ்வு குறித்து இந்த இலக்கியங்கள் பேசுகின்றன.

அவற்றை ஆய்வு செய்வதில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்ட குணேஸ்வரனின் ஒரு பகுதி தேடல்கள் இன்று ஆவண வடிவில் வந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.




You May Also Like

  Comments - 0

  • kuneswaran Sunday, 02 March 2014 01:54 PM

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .