2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தேசத்தின் மகுடத்தில் கிழக்குப் பல்கலையின் காட்சிக்கூடம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சி குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய நகர வயம்பபல்கலைக் கழகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இக்கண்காட்சியில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் கூத்துகளரி, தோரணம் வேடர் சமூக வாழ்வியலின் வழிபாட்டுச் சடங்கு மற்றும் தமிழர் பாரம்பரிய கலைத்துவப் பொருட்கள், சுவடுகள், மருவிப்போன பொருட்கள், கைவிளை பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்காட்சிக்கூடத்தில், வேடர்சமூக வாழ்வியலில் வழிபாட்டுச் சடங்குகளில் வைக்கப்படும் மடை முக்கிய கவனிப்புக்குரியதாக உள்ளது.

இம்மடையில் வைக்கப்படும் பூக்கள், காய்கள், கனிகள், கிழங்கு வகைகள், கிளைகள்; என்பன வைக்கப்பட்டுள்ளன.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள களரி, தோரணம் என்பவை தமிழர் பாரம்பரிய கட்டடக்கலை மரபின் மாண்பை புலப்படுத்துபவையாக உள்ளன.

கம்புகள், மரங்கள் கொண்டு சாதரண மனிதர்கள் சமூதாய விழாக்களில் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள் இவை காணப்படுகின்றன.

இக்கலை ஆக்கங்கள் பொதுப் பண்பாட்டிற்குள்ளும் பண்பாடுகள் கடந்தும் ஊடறுத்து பயனளிக்கும் வகையில் விழாக்களில் காட்சிக் கூடங்களாகவும் குறும் வடிவங்களின் பண்பாட்டு நினைவுப் பரிசில்களாகவும் வடிவமைக்கப்பட்டு பண்பாட்டு பரவலாக்கத்திற்கும் பொருளாதார வருவாய்க்கும் உரியதாக்கப் பட்டிருக்கின்றது.

இதனை மையப் படுத்தியதாக தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் நுண்கலைத்துறையினரால் இக்காட்சிக்கூடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் வரவேற்பினை பெற்றதாக இக் காட்சிக்கூடம் அமையப் பெற்றுள்ளது.

உள்ளக அரங்கில் காட்சிப்படுத்தலும் பறங்கிய சமூகத்தின் இசை அரங்கமும் வெளியரங்கில் கூத்தும் வேடர் சமூக சடங்கும் நேர அட்டவணைப்படி இடம்பெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .