2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களின் குறு நாடகப்போட்டிகள்

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கொழும்பு டவர் மண்டபத் திரையரங்கு மன்றம் நடத்தும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கான குறு நாடகப்போட்டிகள் முதல்தடவையாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

ரவர் மண்டபத்திரையரங்க பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டக்களஸ் சிறிவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கலாசார மற்றும் கலைகள் அலுவல்கள் அiமைச்சு அனுசரணை வழங்கியது.

இந்  நாடகப்போட்டியில் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி, மன்னார் சென்சேவியர் பெண்கள் கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தாக்கல்லூரி, மட்டக்களப்பு கிரான் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், கல்முனை பாண்டிருப்பு மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் திருக்குடும்பக்கன்னியர் மடப்பாடசாலை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகிய 12 பாடசாலைகளின் நாடக ஆற்றுகைகள் இடம்பெற்றன.

இந்த நாடகப்போட்டிகள் வழமையாக கொழும்பு ரவர் மண்டபத்திரையரங்கு மன்றத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X