2024 நவம்பர் 02, சனிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்.

இந்து கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இலக்கிய குழுவினால் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கலுக்கு இலங்கை எழுத்தாளார்கள் மற்றும் நூல் வெளியீட்டாளார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுகளுக்காக 2013 ஆம் ஆண்டுக்குள் பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்யும் போது அதனை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்கில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களை நேரடியாக ஒப்படைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் இதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் வரையிலான காலப்பகுதி வரையிலும் முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட 48 பக்கங்களுக்கு குறையாத நூல்களில் ஒரு நூலின் மூன்று (3) பிரதிகள் வீதம்  ஏற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன.

இந் நூல்களை 2014 பெப்ரவரி  மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் ' செயலாளார் அரச இலக்கியக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம்,  8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல' என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாம் அனுப்பிவைக்கலாம்  அல்லது நேரடியாகவோ ஒப்படைக்கலாம். 

அரச விருது வழங்கலுக்காக நூல்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சுய நாவல்,சுய சிறுகதை,சுய கவிதைப் படைப்பு,சுய இளையோர் இலக்கிய படைப்பு,சுய பாடலாக்கத் தொகுப்பு, நாடகம்,சுய அறிவியல் புனைகதை,சிறுவர் இலக்கிய படைப்பு (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்),சுய புலமைத்துவ மற்றும் ஆய்வூசார் படைப்பு,மொழிபெயார்ப்பு நாவல்,மொழிபெயார்ப்பு சிறுகதை தொகுப்பு,மொழிபெயார்ப்பு கவிதை படைப்பு,மொழிபெயார்ப்பு நாடகம்,மொழிபெயார்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வூசார் படைப்பு,நானவித விடய நூல்கள்.

இது குறித்த மேலதிக விபரங்களுக்காக 011-2872030 அல்லது 011-2872031 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அல்லது கலாசார அலுவல்கள் பணிப்பாளர்,கலாசார அலுவல்கள் திணைக்களம், 8 ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல என்ற முகவரியூடாக தொடர்பு கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .