2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


மருதம் கலைக்கூடல் மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் முன்தினம் அதன் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தின் எதிர்கால் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அதன் செயலாளர் எம்.எஸ்.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

அதேவளை சமூக மற்றும் கலை இலக்கிய சேவைகளில் முக்கிய பங்காற்றி வருகின்ற ஐந்து பிரமுகர்களை பாராட்டி கௌரவிப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் கௌரவிப்பு விழாவொன்றை நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மன்றத்தின் நடப்பு வருடத்திற்கான  புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனடிப்படையில், தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா, சிரேஷ்ட உப தலைவராக எம்.ஐ.இஸ்ஸதீன், உப தலைவர்களாக ஏ.ஏ.சித்தீக், எம்.எம்.எம்.ரஜாய், யூ.எல்.அக்பர், செயலாளராக எம்.எஸ்.ஜௌபர், உப செயலாளராக எம்.சி.எம்.முனாஸ், பொருளாளராக- எஸ்.எல்.றியாஸ் ஒருங்கிணைப்பாளாக ஏ.பீ.கலீலுர் ரஹ்மான் ஆலோசகர்களாக- முபீதா உஸ்மான், எம்.ஐ.ஏ.மஜீத் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம்.ஏ.சி.சாஹிர் கரீம,; யூ.ஏ.ஜிப்ரி ஏ.எம்.றியால், ஏ.எச்.எம்.சர்ஜூன,; ஏ.எம்.றியாஸ், யூ.எல்.எம்.றிகாஸ், எஸ்.ஏ.நூர்தீன், சி.பி.எம்.அலியார், எஸ்.எல்.ஜனுபர் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X