2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பட்


மன்னார், அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வியின்  (செல்வி வேலு.சந்திரகலா) 'துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்;' கவிதை நூல் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மன்னார் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டிலும்; மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் துரையூரான் திரு.எம்.சிவானந்தனின் தலைமையிலும் மன்னார்  கலையருவி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் முதல் பிரதியை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை பகுதிநேர விரிவுரையாளர் ம.ந.கடம்பேஸ்வரன் (காப்பியதாசன்) வெளியிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  பெற்றுக்கொண்டார்.

 'போராளியின் காதலி' நாவல் பற்றிய பார்வைப் பகிர்வை நாவலாசிரியர்  எஸ்.ஏ.உதயனும் 'ஈழப்போரின் இறுதிநாட்கள்' பற்றிய உணர்வுப்பகிர்வை சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர்  எஸ்.சதீஸும் 'காணாமல் போனவனின் மனைவி', 'முடியாத ஏக்கங்கள்' ஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிய பார்வைப் பகிர்வை எழுத்தாளர் கானவியும் 'இப்படிக்கு அக்கா', 'இப்படிக்கு தங்கை' பற்றிய கவிதைத்தொகுதிகள் பற்றிய உணர்வுப்பகிர்வை கவிஞர் வேல்.லவனும் நிகழ்த்தினர்.

நூலின் மதிப்பீட்டுரையை ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகமும் ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூல்களின் ஆசிரியர் வெற்றிச்செல்வியும்  நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X