2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இன்னொரு மொழியை குறைத்து மதிப்பிடுவது கூடாது: தமிழருவி சிவகுமாரன்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன், சி. சிவகருணாகரன்

ஓர் இனம் வாழவேண்டும் என்பதற்காக நாம் இன்னொரு இனத்தை ஒதுக்கவோ அழிக்கவோ சிந்திக்கக் கூடாது. அதேபோல நமது மொழியின் மீதான பற்றுக்காரணமாக நாம் இன்னொரு மொழியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அதைக் கேவலப்படுத்துவது நல்லதல்ல. தமிழ் மொழி சிறந்த மொழி என்பதற்காக அயல்மொழிகளை நாம் புறக்கணிப்பது நல்லதல்ல. கிளிநொச்சியில் புறரீதியான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். ஆனால், அகரீதியான வளர்ச்சியும் சரிநிகராக ஏற்பட்டிருப்பதை இங்கே அவதானிக்கிறேன் என்று தெரிவித்தார் தமிழருவி சிவகுமாரன்.
 
கிளிநொச்சி நகரத்தில் கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை நடைபெற்ற  கரைச்சிப் பிரதேச செயலகத்தின் கலாசார விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கும்போது தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய தலைமுறையினர் விளங்கிக்கொள்ள வேண்டும். மொழியின் சிறப்பை விளங்கிக் கொண்டாலே நாம் நன்றாகச் சிந்திக்க முடியும் என்றார்.
 
கரைச்சிப் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசக் கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான விருதுகளை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் கரை எழில் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X