2024 நவம்பர் 02, சனிக்கிழமை

மண்முனை மேற்குப் பிரதேச கலாசார விழாவும் சஞ்சிகை வெளியீடும்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு, மண்முனை மேற்குப் பிரதேச கலாசார விழா திங்கட்கிழமை (23) பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச கலாசார பேரவையின் தலைர் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலாசார பேரவையின் சஞ்சிகையான 'அகனி' சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன் இவ் வருட கலாசார விழா சிறப்பு மலராக கலாசார 'காடு' என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.

இக்கவிதை தொகுப்பில், கலாசார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கவிதைகள் அடங்கியுள்ளன.

இதேவேளை, கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தின் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய வரலாறு கூறும் 'நந்தியின்' மகிமை தென்மோடி கூத்தும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன், மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் எம்.ஏ.சீ.ஜெய்நுலாதீன், வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையமளர் எல் ஆர்.டிலிமா, சிறுவர் நிதிய திட்ட அதிகாரி கே.நாகராசா ஆகியோர் கலந்துகொண்டனர். 










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .