2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அனுராதாவின் சிறுகதைகள் நூல் வெளியீடு

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


புரவலர் புத்தக பூங்காவின் 34ஆவது வெளியீடான அனுராதாவின் சிறுகதைகள் எனும் நூல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் புரவலர் புத்தக பூங்கா நிறுவனத்தின் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றது.

களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நூலாசிரியர் அனுராதா பாக்கியராஜாவினால் எழுதப்பட்ட இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பினை சமூகஜோதி எம்.ஏ.ரபீகும் வரவேற்புரையினை அந்தனி ஜீவாவும், நன்றி உரையினை மௌலவி முபாறக்.ஏ.மஜீத்தும் ஏற்புரையினை நூலசிரியர் அனுராதா பாக்கியராஜாவும் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மூத்த பெண் படைப்பாளியும் ஊடகவியலாளரும் கலைக்கேசரி ஆசிரியருமான அன்னலெட்சுமி ராஜதுரை கௌரவிக்கப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X