2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

துணுக்காய் பிரதேச கலாசார பெருவிழா

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


முல்லைத்தீவு, துணுக்காய்  பிரதேச செயலக பிரிவின்  கலாசார பெருவிழா நேற்று திங்கட்கிழமை  பிரதேச  செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச  செயலர் ரி.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு  மாவட்ட  செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனும் சிறப்பு  விருந்தினராக முல்லை மாவட்ட மேலதிக செயலாளர் கி.அ.மோகன்ராஸும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது, துணுக்காய் பிரதேச செயலக  கொடி, பிரதேச கீதம்  என்பன  அறிமுகம்  செய்துவைக்கப்பட்டன.

தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.அருந்தாகரனுக்கு  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதையடுத்து யுத்தத்தின் போது இறந்த துணுக்காய் பிரதேச செயலர் நா.நந்தகுமாரின் நினைவுப் படத்தை அவரது மனைவி திரைநீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச மாணவர்களின் கலை நிகழ்வுகள்  நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X