2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பிரிஷ் இன் லைப் ஆங்கில கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவி ஸம்ஹா  எழுதிய ஆங்கில கவிதை நூல் நேற்று சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.பி்.பாத்திமா சம்ஹா எழுதிய பிரிஷ் இன் லைப்  (Breeze in Life) என்ற  ஆங்கில கவிதை நூல்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற   இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசிம், கல்முனை பிரதேச செயலாளர்; எம்.எம்.நௌபல், சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை கல்வி வலயத்தின் ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X