2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'ஞானம்' கிறிஸ்தவ பாடல் இறுவெட்டு வெளியீடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக்கினால் (அமதி) தயாரிக்கப்பட்ட 'ஞானம்' எனும் கிறிஸ்தவ பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை விக்ரர் அவிதப்பர் தலைமையில்  பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 'ஞானம்' கிறிஸ்தவ பாடலின் முதலாவது இறுவெட்டினை அருட்தந்தை இராயப்பு அடிகளார் வெளியிட்டு வைத்தார்.

இந்த இறுவெட்டிற்கான இசை மற்றும் பாடல்கள் தென்னிந்திய கலைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கான வரிகள் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை இராயப்பு அடிகளாரும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, வவுனியா கல்வியற் கல்லூரி பீடாதிபதி கே.பேனாட்டும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X