2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சாஹித்திய விழா போட்டி வெற்றியளர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


வடமேல் மாகாண சபையினால் நடத்தப்பட்ட இந்த ஆண்டுக்கான  சாஹித்திய விழா போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றோருக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் வர்ணப் புகைப்படப் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.என்.எம்.ஹிஜாஸ் முதலிடத்தைப் பெற்று வடமேல் மாகாண முதலமைச்சரிடமிருந்து பரிசில், சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .