2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கம்பதாசன் கவிதைகள் பற்றிய பாடிப்பறை

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக விஞ்ஞான கற்கை வட்டம் வழங்கும் 'பாடிப்பறை' நிகழ்ச்சி எதிர்வரும் 17-11-2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஹம்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை பாடிப்பறையானது கவிஞர் கம்பதாசன் கவிதைகளை தொனிப்பொருளாகக் கொண்டு நடைபெறவிருக்கிறது.
 
பாடிப்பறையானது மாதந்தோறும் முழுமதி நாட்களில் ஒழுங்குசெய்யப்படும் கவிதைகளுக்கான நிகழ்ச்சியாகும். கவித்துறை ஆய்வுகள், கவியரங்குகள், கவிதை ஆற்றுகைகள் உட்பட கவித்துறை நிகழ்ச்சிகள் பலவற்றை உள்ளடக்கியதாக இது அமைகிறது. முதலாவது ஆண்டில் 'முழுமதி நாளில் கவிதையின் தூறல்' என்ற தொனிப்பொருளிலும் இரண்டாவது ஆண்டில் 'மக்களைப் பாடுவோம் மக்களைப் பேசுவோம்' என்ற தொனிப்பொருளிலும் பாடிப்பறை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்தன. இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் 'மானுடம் வாழப் பாடுவோம்' என்பதனைத் தொனிப்பொருளாகக் கொண்டு பாடிப்பறை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. 
 
இம்மாதப் பாடிப்பறை நிகழ்ச்சியில் 'கம்பதாசன் கவிதைகளும் முற்போக்குச் சிந்தனையும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் ஆய்வுரையாற்றுகிறார். கவிதை நயவுரை க. ஆதித்தனால் ஆற்றப்படும். கவிஞர் சடாகோபனின் 'வெள்ளி முளைச்சிருக்கு' என்ற கவிதை நயவுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கவிதைப் பகிர்வு நிகழ்வொன்றும் இடம்பெறும். 
 
கவிதையையும் கலையையும் புரிந்துகொண்டு, அவற்றின் கலைப்பெறுமதியைச் சமூக மாற்றத்திற்கான பயணத்தில் துணைகொள்வதற்கு ஆர்வமுள்ள அனைவரையும் பாடிப்பறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தினர் தோழமையுடன் அழைக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X