2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாவட்ட இலக்கிய விழா

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் நடத்திய மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பத்தரமுல்லை கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் விஜித் கணுகல, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி அழகியற் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு பரத கலாலயா மாணவிகளின் வரவேற்பு நடனம், கலைஞர்கள் கௌரவம், எழுகதிர் நூல் வெளியீடு, மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புகள்; என்பன வழங்கப்பட்டன.

இதன்போது, இலக்கியம், ஆய்வு, நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற துறைகளைச் சேர்ந்த 7 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .