2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'அனந்தம்' மலர் வெளியீடு

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்
 
நாடகக் கலைஞர் கலாபூஷணம் மா.அனந்தராசனின் மலர் வெளியீடும் பாராட்டு விழாவும் தேவரையாளி இந்து கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.
 
வடமராட்சி அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற ஆசிரியர் க.கந்தசாமியும் சிறப்புப் பிரதியை ந.கிருஷ்ணானந்தனும் பெற்றுக்கொண்டனர்.
 
ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடப் பேராசியர் மா.நடராஜாசுந்தரம் சிறப்பித்தார்.
 
இந்நூலின் வாழ்த்துரையை வடமாகாண சபை உறுப்பினர் வே.சிவயோகன், இ.து.குலசிங்கம், சி.பசுபதி ஆகியோரும் பாராட்டுரைகளை கொற்றை பி.கிருஷ்ணானந்தன், கே.ஆர்.டேவிட், கலாநிதி செ.திருநாவுக்கரசு, மா.கிருஷ்ணகாந்தன் ஆகியோரும் வெளியீட்டுரையை என்.வேல்நந்தனும், நயப்புரைகளை பரா.ரதீஸ், ஆ.கந்தையா ஆகியோரும் ஏற்புரையை இம்மலரின் ஆசிரியர் மா.அனந்தராசன், இணையாசிரியர் சு.குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.





You May Also Like

  Comments - 0

  • சு, குணேஸ்வரன் Monday, 04 November 2013 02:16 PM

    நிகழ்வை பற்றிய பதிவுக்கு நன்றி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .