2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'மடை' சிறப்பாக முடிவு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன், சசிகுமார் (திருமலை)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருமலை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான 'மடை' எனும் பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும், கலைஞர்களின் கொண்டாட்டமும் ஞாயிற்றுக்கிழமையுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலாமாக ஆரம்பமான இப்பெருவிழாவில் பல்வேறு கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இந்துக்கலாசாரத்திணைக்கள ஆராய்ச்சி அலுவலர் திருமதி தேவகுமாரி ஹரன்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இந்தியாவின் தமிழ்நாடு மதுரை காமராஜா பல்கலைக்கழக நாட்டாரியல் துறைப் பேராசிரியர் பி.டி.நஜிமுதீன், கிழக்குப் பல்கலைக்கழக நுணகலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, இறக்காமம், திருகோணமலை, மலையகத்தின் பண்டாரவளை, ஹட்டன், மற்றும் மட்டக்களப்பு பாரம்பரியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, பாரம்பரிய கலைப்பொருள்கள் கண்காட்சியும், பறைமேளக் கூத்து, பறங்கியர்களின் கப்பறஞ்ஞா நடனம், முல்லைத்தீவின் பறைமேளம், மலையகத்தின் தப்பு உள்ளிட்ட ஆற்றுகைகள் ஆரம்ப நிகழ்வுக்கு வருகைதந்த பாடசாலை மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்டது.






You May Also Like

  Comments - 0

  • Prathap jey Wednesday, 30 October 2013 02:44 AM

    சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒன்று...

    Reply : 0       0

    P.Vijayakanthan Friday, 29 November 2013 12:51 AM

    மிகவும் வரவேற்புக்குரியது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X