2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்
 
'மூவிதழ் மலர்' என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
 
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாவலயத்தின் உதவிப் பணிப்பாளரும் பாடகியுமான திருமதி ஜுடித் சம்பிகா இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.
 
நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ், வலயக் கல்வி அதிகாரிகள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
நிகழ்வில் இறுவட்டில் உள்ள பாடல்கள் பாடகியால் பாடப்பட்டதுடன் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .