2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பௌர்ணமி கலைவிழா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி கலைவிழா காந்தி சதுக்கத்தில் 18 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள கலைஞர்களின் திறமைகளை  வெளிக் கொண்டு வரும் நோக்கோடும் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  மாவட்ட அரச அதிபர் பி.எஸ். எம். சாள்ஸ்  தெரிவித்தார்.

ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்திலும் ஒவ்வோரு பிரதேச பிரிவுகளிலுமிருந்து மட்டக்களப்பின் கலை கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு பிரதேச கலைஞர்களின் 'அம்மா' வீதி நாடகம், 'நந்தியின் மகிமை' உலகநாச்சி வரலாறு தென்மோடி நாட்டுக்கூத்து என்பன இடம்பெற்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் கே. தவராசா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ். மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X