2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விருதுப் போட்டியில் பெருமளவான இளைஞர், யுவதிகள் பங்கேற்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
 
இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேழைவகள் மன்றம் என்பன இணைந்து நாடாத்தும் இளைஞர் விருது விழாவிற்கான போட்டியின் மட்டக்களப்பு மாவட்ட விருது விழாவிற்கான மாவட்ட மட்டப் போட்டிகள் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றன.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையினால் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
 
இப் போட்டியின் போது பரதநாட்டியம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், மௌன நாடகம் எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.
 
இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மஹரகமையில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட விருது வழங்கல் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .