2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'சின்னஞ்சிறிய பூக்கள்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -வடிவேல் சக்திவேல்


'சின்னஞ்சிறிய பூக்கள்'  நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சந்திவெளி பாலையடித்தோணா சிறிமுருகன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நூலில் முழுமையாக சிறுவர்களின் செயற்பாட்டு வடிவங்களே உள்ளடக்கப்பட்;டுள்ளது.

இந்நூலில் சிறுவர்களின் கவிதைகள், பாடல்கள், குறுந்திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், மது பாவனையைத் தடுத்தல், நான் எதிர்பார்க்கும் மலையகம், நூறு ரூபாய் ஒன்றின் சுயசரிதை, யுத்த வாழ்க்கை, மலையக மக்களின் அடக்குமுறை, (குனிய வேண்டாம்), மலையகத்தின் வரலாறு, வெளிநாடு சென்ற எனது அப்பா, போன்ற பல தலைப்புக்களில் இந்நூலில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்நூலின் முதல் பிரதியினை சந்திவெளி பாலையடித்தோணா சிறிமுருகன் வித்தியாலயத்தின் பாடசாலை அதிபர் செல்வராசா பெற்றுக்கொண்டார்.  நயவுரையினை சமூக அலுவலகர் மேகராசா வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X