2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இலக்கியத்திற்கான சர்வதேச இணையத்தில் கலைவாதியின் சிறுகதை

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைவாதி கலீலினால் எழுதிய சிறுகதையொன்று அமெரிக்காவில் இயங்கும் இலக்கியத்திற்கான சர்வதேச இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுகதை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூரை சேர்ந்த றிசானா நபீக் தொடர்பில் கலைவாதி கலீலினால் எழுதப்பட்டுள்ளது.

இந்த சிறுகதையின் ஆங்கில உரிமம், பிறமொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான உரிமம், ஒலி, ஒளி வடிவம் மற்றும் அச்சுப் பதித்தலுக்கான உரிமம் ஆகியவற்றை குறித்த இணையம் கலைவாதி கலீலிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.  இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கலைவாதி கலீல் அண்மையில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ் மொழி மூலம் விடிவெள்ளி வார இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்த சிறுகதை, பின்னர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு டெய்லி நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.  பிரபல எழுத்தாளரான கே.எஸ்.சிவகுமாரனே இந்த சிறுகதையினை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருந்தார்.

இதேவேளை, மௌலவி முபாரக் அப்துல் மஜீத் மற்றும் எஸ்.ஏ.ஸீ.எம்.கராமத் ஆகியோர் முறையே அரபு மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த சிறுகதையினை மொழியர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்ட தேசத்தின் கண் றிஸானா நபீக் எனும் தொகுப்பு நூலிலும் இந்த சிறுகதை மீள்பிரசுரம் செய்யப்பட்டது.

நாடறிந்த கவிஞரும் கலை இலக்கியவாதியுமான கலைவாதி கலீல் தற்போது நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றுவதுடன் தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியாவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X