2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'றண்டுக' இசை ஆற்றுகை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.எல்.ஜவ்பர்கான்


'நல்லுறவிற்கும் சமாதானத்திற்கும் பண்பாட்டினை முன்னெடுத்தல்' என்ற செயற்றிட்டத்தின் அடிப்படையில் இசை ஆற்றுகையை நடத்தவென ஜப்பான் மற்றும் நியூஸிலாந்தின் பிரபல இசைக் கலைஞர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தனர்.

ஜப்பானிய நிறுவனம், உள்ளூர் ஒழுங்கமைப்பாளராக மட்டக்களப்பில் இயங்கிவரும் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரைக் கொண்டு 'றண்டுக' (பேசும் ஓசைகள்) இசை ஆற்றுகையை நடத்தியது.

இந்த இசை ஆற்றுகை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை மாலை 06 மணி தொடக்கம் 8.30 மணிவரை நடைபெற்றது.

நிகழ்ச்சி இணைப்பாளரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் ந்;ஜயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் நிகழ்த்தினார்.

 'றண்டுக என்பது ஒலிக்கோலங்கள் வழியாக புதிய தொடர்பாடல்கள் நிறைந்த உலகத்தோடு தொடர்பாடலை ஏற்படுத்தும் முறையாகும்' என்னும்; எண்ணக்கருவை கொண்டு பேராசிரியர் மஸாகிகோ சாதோ ஒலிகள் மூலம் பேசு இசைப் புத்தாக்கத்தினை உருவாக்கியிருந்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X