2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'வெள்ளை' ஓவியக் கண்காட்சி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்.எஸ்.பாக்கியநாதன்


இலங்கைத் தமிழ் சூழலில் காத்திரமான ஓவியக் கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஓவியக் கலைஞர் சுசிமன் நிர்மலவாசனின் ஓவியங்களின் கண்காட்சி இன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் ஆரம்பமானது.

'வெள்ளை' எனும் தலைப்பில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர் சி.ஜெசங்கர் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியை கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளரும் பிரபல பெண்ணிலைவாத ஓவிருமாகிய லண்டனில் வசித்து வரும் திருமதி அருந்ததி ரெட்ணராஜ் ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இக் ஓவியக் கண்காட்சியானது எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிமுதல் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியானது சசிமன் நிர்மலவாசனின் ஏழாவது தனிநபர் ஓவியக் காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .