2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் மூதூர் முறாசில் எழுதிய நூல் வெளியீடு

Super User   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

ஊடகவியலாளரான மூதூர் முறாசில் எழுதிய 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும் சில பதிவுகள்: பாகம்-1'  எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூதூரில் இடம்பெறவுள்ளது.

மூதூர் அல் - ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான ஏ.நயிமுத்தீன் தலைமையில்  இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் நூல் அறிமுக உரையை எழுத்தாளர்  ஏ.எஸ்.உபைதுல்லா அதிபரும் நூல் ஆய்வுரையை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸமிலும் நிகழ்த்தவுள்ளனர்.

நூல் வெளியீட்டு உரையை ஊடகவியலாளர் ஆர்.எப்.அரூஸ் வழங்கவுள்ள அதே வேளை நேயம் மற்றும் குரல் ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியர்  எம்.எஸ்.எம். நியாஸின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.

விழா நிகழ்வுகளை எழுத்தாளர் ஏ.எஸ்.அப்துல்லா ஆசிரியர் தொகுத்து வழங்கவுள்ளார். இதன்போது நூல் முதற் பிரதியை முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X