2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'ஷெக் மேட்' குறுந்திரைப்பட வெளியீட்டுவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பைச்சேர்ந்த கோவர்த்தனன் பத்மநாதனின் இரண்டாவது குறுந்திரைப்படமான 'ஷெக் மேட் '
எனும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ.  மண்டபத்திலேயே இந்த குறுந்திரைப்பட வெளியீட்டுவிழா அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.

 'நானும் ஒரு தாய்' என்பதே இவரது முதல் குறுந்திரைப்படமாகும். இந்த குறுந்திரைப்படம் 7 இந்திய விருதுகளையும், இலங்கை விருதொன்றையும் வென்றுள்ளது.

இளம் படைப்பாளி கோவர்த்தனன் பத்மநாதன் திருச்சி எஸ்.எம்.ஆர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்பை முடித்ததன் பின்னர் இந்திய திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திராவிடம் குறுந்திரைப்பட தயாரிப்பை கற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பயின்ற இவர்; மட்டக்களப்பு தயாமோட்டர்ஸ் உரிமையாளரான பத்மநாதன் தம்பதியினரின் புதல்வரும் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X