2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மூத்த கலைஞர்களை கௌரவிக்க ஏற்பாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

ஐக்கிய இராச்சியத்திலுள்ள யுனைட்டட் தமிழ் மியூசிசியன்ஸ்   அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பின் மூத்த கலைஞர்களான இலங்கை வானொலி புகழ் 'ஆதவன்' எஸ்.ஞானப்பிரகாசம்,  முதுபெரும் எழுத்தாளரான  கவிஞர் வாகரைவாணன் (எஸ்.அரியரத்தினம்) ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர்;.

மட்டக்களப்பு பாலமீன்மடு சுற்றாடல் கற்கை நிலையத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஓய்வு பெற்ற அதிபர் செ.தபராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய இராச்சியம் யுனைட்டட் தமிழ் மியூசிசியன்ஸ் அமைப்பின் உறுப்பினரான அ.ஜெயராஜ்   மேற்கொண்டு வருகின்றார்.

இவர் வாகரை 'ஜெயம்' இசைக்குழுவின் மூலம் 12 வயதில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்து இன்று தன் இசையால் பிறநாடுகளிலும் தனியிடத்தைப் பெற்றுகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .