2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கலந்துரையாடல்...

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞையும், உளவளத் துணையாளருமான சுல்பிகா இஸ்மயில் மற்றும் சிறுகதை எழுத்தாளரும் நாடக நெறியாளரும், குறுந்திரைப்பட நெறியாளருமான சுமதி ரூபன் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, சூரியா பெண்கள் நிலையத்தின் தலைவி, உத்தியோகத்தர்கள், மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுமதி ரூபனின் 'மனுசி' குறுந்திரைப்படம் திரையிடப்பட்டதுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த சுமதி ரூபன், ' மௌனத்தை மொழியாகக் கொண்டமை தொடர்பில், கருத்து வெளியிடுகையில்,

மௌனத்தின் பலமும் அதன் வலிய தன்மையும் பற்றிய விடயங்கள், நாடக நெறியாளராக வளர்வது குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

அதேநேரம், சுல்பிகா இஸ்மயில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்  பற்றியும் அதற்கான சமூகக் காரணங்கள் பற்றியும் புலம்பெயர் சிக்கல்கள் எவ்வாறு பெண்களின் குடும்ப வாழ்வில் தலையிடுதல் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .