2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் இலக்கியச் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சிவகருணாகரன்

41ஆவது இலக்கியச் சந்திப்பு எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலைக்கு அருகிலுள்ள யூரோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இலங்கையின் இலக்கியம், பண்பாடு, பாரம்பரியக் கலைகள், சாதியம், தேசிய இனங்களின் பிரச்சினை ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்.  

இதன்போது எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் அனுபவப் பகிர்வுகள், குறும்படக் காட்சி,  கவிதை, நாடகம் போன்ற கலை அம்சங்களும் நடைபெறும்.  

இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், புலமையாளர்கள், கலை, கலாசார, சமூக விடயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பல்வேறு சமகால விடயங்கள் தொடர்பாகக் கரிசனை கொண்டுள்ளோரும் ஆய்வுகளை மேற்கொள்வோரும் சந்திப்பதற்கான ஒரு களமாகவும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான ஒரு ஆரம்ப முயற்சியாகவும் இந்நிகழ்வு அமையுமென 41ஆவது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .