2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'உண்மைகளை எழுதும் படைப்பாளிகள் ஆதரிக்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி. சிவகருணாகரன்


'உண்மைகளை துனிச்சலுடன் எழுதும் படைப்பாளிகளை ஆதரிக்க வேண்டும். அவர்களே சமூகத்தை ஒளியூட்டி வழிநடத்திச் செல்கிறார்கள். ஆனால், பொய்களையே அதிகமான அளவில் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் புனைவும் கனவும் தேவையாக உள்ளது. கற்பனையில் மிதப்பது பலருக்கும் சுகமானது. யதார்த்தம் கசப்பானது. எனவேதான் யதார்த்தவாதி கலகக்காரனாக இருக்கிறான்' என எழுத்தாளரும் கிளிநொச்சி பாரதி வித்தியாலய அதிபருமான பெருமாள் கணேசன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் கலாசாரப் பேரவையின் ஆதரவில் இன்று நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் நூல் வெளியிட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து  அவுஸ்ரேலியாவில் வாழும் கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகளைத் தாங்கிய மறுவளம் நூலினை கிளிநொச்சியில் அமைந்துள்ள மகிழ் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலினை கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் வெளியிட்டு வைத்தார்.  இந்நிகழ்வில் பெருமளவு படைப்பாளிகளும் கலைஞர்களும் கலந்துகொண்டனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .