2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கலாசார விழா

Kogilavani   / 2013 ஜூலை 03 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விழா நேற்று மட்.கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளரும் கலாசார போரவைத் தலைவருமான என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி வேள்ட்விஷன் லங்கா முகாமையாளர் எட்வின் ரணில், மட்.கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தின் பல்துறைக் கலைஞரும் ஓய்வு பெற்ற அதிபருமான தவசிப்பிள்ளை-விவேகானந்தம், பிரபல அண்ணாவியார் கணபதிப்பிள்ளை-பாலசுந்தரம் ஆகியோர் 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் கருப்பொருளின் கீழ் சிறப்புக் கௌரவம் வழங்கி பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, பிரதேசத்தினால் தெரிவுசெய்யப்பட்ட கலை நிகழ்வுகள்  இடம்பெற்றதோடு பிரதேசமட்டத்தில் கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .