2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'மருதம் கலாசார விழா சிறப்பு மலர்' வெளியீடு

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
 
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை 'மருதம் கலாசார விழா சிறப்பு மலர்' வெளியீட்டு வைக்கப்பட்டது.
 
மட்டு கண்டுமணி மகாவித்தியாலய கோட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரும் கலாசார போரவைத் தலைவருமான என்.வில்வரெத்தினம் தலைமைவகித்தார்.
 
இந்நிகழ்வில் தலைமையுரையினை பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களும் நூலின் நயவுரையினை முன்னாள் அதிபர் இ.கோபாலபிள்ளை அவர்களும் நிகழ்த்தினர்.
 
நூலின் முதற் பிரதியினை பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களிடமிருந்து களுவாஞ்சிகுடி வேள்விஷன் லாங்கா முகாமையாளர் எட்வின் ரணில் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
 
இந்நிகழ்வில் கலைஞர்கள், பொதுமக்கள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .