2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

கைவினைப் பொருட்கள் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை கைவினைப் பொருட்கள், மற்றும் தொழிநுட்பக் கண்காட்சி நடைபெற்றது.

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் இரண்டாம் வருட தொழிநுட்ப பொறுப்பு விரிவுரையாளர் எம்.என்.எம்.நியாஸ், மற்றும் விரிவுரையாளர் டி.ஆர்.நவநீத கிருஸ்னன், வருகை விரிவுரையாளர் திருமதி சி.விஜயின், ஆரம்ப பிரிவு பொறுப்பு இணைப்பாளர் திருமதி ரி.குகதாஸ் மற்றும் ஆகியோர்களின் வழிகாட்டலில் தொழிநுட்ப பிரிவு, கலைப்பிரிவு, ஆரம் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரிய பயிலுனர் மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெற்றது.

இக் கண்காட்சியினை மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில்  கல்லூரியின் உப பீடாதிபதி டி.புவனேஸ்வரி உட்பட கல்லூரியின் உப பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சியில் கட்டிட நிர்மாண தொழிநுட்பம், மின்னியியலும், இலத்திரனியவிலும், வடிவமைப்பு தொழிநுட்பம், உட்பட கழிவுப் பொருட்களின் மூலம் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் ஆசிரிய பயிலுனர் மாணவர்களின் பாடவிதான செயற்பாட்டை விருத்தியடையச் செய்யும் வேலைத்திட்டமாக இந்த கண்காட்சி இடம்பெற்றதாக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி பாக்கியராஜா குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X