2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'உள்ளம்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட். பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் ஆசிரியர் கே.குமாரசிங்கத்தினால் தொகுக்கப்பட்ட 'உள்ளம்'  என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர்  பொன்.வன்னியசிங்கத்தின்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ந.புள்ளநாயகம், கோட்டக் கல்வி அதிகாரி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் அறிமுகவுரையினை நூலாசிரியர் கே.குமாரசிங்கம் நிகழ்த்தினார்.  நயவுரையினை மட். மகிழுர் கண்ணகி வித்தியாலய அதிபர் பிரபாகரன் நிகழ்த்தினார்.

நூல் முதல் பிரதியை வித்தியாலய அதிபர்  பொன்.வன்னியசிங்கம், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கிவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X