2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அம்மன் புகழ் பாடும் இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் புகழ்பாடும் இரண்டு இறுவட்டுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டன.
இவ் இறுவட்டில் தென்னிந்திய மற்றும் நம்நாட்டு பாடகர்கள் பாடிய பக்திப் பாடல்கள் உள்ளடங்குகின்றன.

புன்னைச்சோலை ஆலய பரிபாலசபையினரின் ஏற்பாட்டில் ஆலயத்தின் தலைவர் சின்னப்பு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

அன்னையின் புகழ்பாடும் இந்த இறுவட்டின் பாடல் வரிகளை மட்டக்களப்பு கவிஞர்கள் எழுதியுள்ளனர்.

இதற்கான தயாரிப்பு வேலைகளை தென்னியந்தியாவின் சினிமாத்துறையில் உள்ள பிரபல ஒளிப்பதிவாளரும் மட்டக்களப்பு புன்னைச்சோலையை சேர்ந்தவருமான சிற்றரசு மேற்கொண்டுள்ளார்.

இதன் பாடல்களை பிரபல தென்னிந்திய பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னிகிருஸ்ணன், ரி.எல்.மகாதேவன் உட்பட பலர் பாடியுள்ளனர்.

ஒன்பது பாடல்களைக்கொண்டதாக இந்த இந்த இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு கவிஞர் செ.குணரெட்னம் எழுதிய 'புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் காவியம்' இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

மட்டக்களப்பை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் கோகுலசிங்கம் சிவாகரனின் இனிய இசையில் இசைக்கலைமணி திருமதி சாந்தினி தர்மநாதன், விஸ்வநாதன் பத்மஸ்ரீ அகியோர் இதற்கான பாடல்களை பாடியுள்ளனர்.

இதன்போது இறுவட்டு தொடர்பான விளக்கவுரையினை கல்லடி காயத்திரிபீடத்தினை சேர்ந்த சிவஸ்ரீ சிவயோகச்செல்வன் சாம்பசிவம் குருக்கள் நிகழ்த்தினார்.

இதன்போது ஆலயத்தின் வளர்ச்சிக்கு 40 வருடமாக தலைவராக இருந்து சேவையாற்றிய சின்னப்பு மட்டக்களப்பு வர்த்தகசங்கம் மற்றும் புன்னைச்சோலை பொதுமக்களினால் கௌரவிக்கப்பட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .