நவீன இலத்திரனியல் ஊடகங்களில் வானொலிக்கென தனி இடம் உண்டு. எவரும் எங்கிருந்தும் என்னசெய்துகொண்டும் வானொலியோடு இணைந்திருக்க முடியுமென்பதே வானொலி ஊடகத்தின் சாதனை ரகசியமாக கருதப்படுகிறது.
தமிழ் வானொலித்துறையின் ஏகபோக உரிமை நம்நாட்டு தமிழ் வானொலி கலாசாரத்திற்கே உரித்துடையது என்பதை இந்த உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். தனியார் தமிழ் வானொலிகள், எஃப்.எம் அலைவரிசைகளினூடாக தமது ஒலிபரப்பினை ஆரம்பித்த காலத்தில் உதயமான குறிப்பிட்ட சில வானொலிகள் நேயர்களின் ரசனைக்கு விருந்தளித்தன. எனினும் 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வானொலி நேயர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப தமது நிகழ்ச்சிகளில் மாறுதல்களை ஏற்படுத்த தவறியுள்ளன. இந்நிலையில் வானொலி நேயர்கள் மத்தியில் மாற்றத்திற்கான தேவை அதிகளவில் உணரப்படுகின்ற காலமே இது.
1998ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் வானொலிகள் வித்தியாசத்தை விளைவித்தது போல வானொலித்துறையின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு நேயர்களை அழைத்து செல்வதற்கான அடித்தளமே இது.
வர்ணம் எஃப்.எம். எனும் அழகிய நாமத்தில் முற்றிலும் மாறுப்பட்ட தமிழ் வானொலி கலாசாரமொன்று நேயர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நம் தேசத்தின் வானலைகளுக்கு வர்ணம் தீட்ட 90.4, 90.6 எஃப்.எம். அலைவரிசைகளில் கடந்த 25ஆம் திகதி முதல் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களுக்கு வண்ண உணர்வளிக்க உதயமாகியிருக்கிறது.
பிரபல சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்களை ஒளிபரப்பும் முதற்தர தொலைக்காட்சியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்ணம் தொலைக்காட்சியின் சாதனை பயணத்தின் மற்றுமொரு ஆரம்பமே வர்ணம் எஃப்.எம்.
வானலைகளில் ஏற்கனவே நன்கு பரீட்சயமான, திறமையான, நேயர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற, நம் சமூகத்தின் குறை நிறை அறிந்த, நம்மவர்களுக்கான சமுதாய கடமைகளை நிறைவேற்றுவதில் பின்னிற்காத, அனுபவமும் ஆற்றலுமிக்கதோர் அணி வர்ணத்தில் வானலையை அலங்கரிக்க கை கோர்த்துள்ளார்கள். பலவருட அனுபவமிக்க நேயர்களின் அபிமானத்தை வென்ற அறிவிப்பாளர்கள் வர்ணம் எஃப்.எம் வானொலியில் இணைந்திருக்கின்றமை மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதத்தில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனியே தென்னிந்திய பாடல்களை ஒலிபரப்பும் வானொலியாக இன்றி எம் மண்ணின் கலைஞர்களையும் கௌரவிக்கும் சமுதாய பொறுப்புமிக்க வானொலியாக வர்ணம் செயற்பட தொடங்கியிருக்கிறது.
இனிமையான இசை இடைவிடாது ஒலிக்கும் வானொலியாக வர்ணம் என்றும் திகழும். பாடல்களை வகைப்படுத்தி நேரத்துக்கு நேரம் நேயர்களின் ரசனைக்கேற்ப வழங்குவது வர்ணத்தின் சிறப்பம்சமாகும். எந்நேரமும் ஜனரஞ்சகமான பாடல்கள் மாத்திரமே வர்ணத்தில் ஒலிபரப்பப்படும்.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாகவும், தகவல்களாகவும் எந்நேரமும் நேயர்களை விரைவாக வந்துசேரும் விதத்தில், வர்ணம் வானொலி செயற்பட தொடங்கியிருக்கிறது.
தற்கால இளம் பராயத்தினர் விரும்பி எதிர்பார்க்கும் விளையாட்டு தகவல்கள், நேரடி கள நிகழ்வுகள் தாமதமின்றி வர்ணத்தில் உல வரத் தொடங்கியுள்ளன.
நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் கலை, கலாசார, இசை நிகழ்வுகளை வழங்குவதோடு, நம்மவர்களின் கலைத் தாகத்திற்கு உயரிய அங்கீகாரத்தை வழங்கும் பிரமாண்டமான திட்டங்கள் வர்ணம் வசம் உள்ளன.
ஒட்டு மொத்தமாக நோக்கும்போது தற்கால தமிழ் பேசும் மக்களின் அனைத்துவித வானொலி தேவைகளும் வர்ணம் எஃப்.எம். ஊடாக நிறைவேறப்போவதாக வர்ணம் அறிவிப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.
வர்ணம் எஃப்.எம். தமிழிசையின் வர்ணம்..!!!
(படங்கள்: வருண வன்னியாராச்சி)