2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் கம்பன் விழா

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணம் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் 'கம்பன் விழா 2013'  யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் யாழ். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் இந்த விழா ஆரம்பமானது.

3 தினங்களுக்கு நடைபெறுகின்ற இவ்விழாவின் ஆரம்ப விழாவில் ஆசியுரைகளை நல்லூர் ஆதினகுரு முதல்வர், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜேபநேசன்,  மௌலவி எ.எம்.எ.அஸீஸ் ஆகியோர் வழங்கினர்.

'செல்லும் சொல்வல்லான்', 'இறைகுகன்' ஆகிய கவிதை நூலும் மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான கம்பன் விழா இறுவெட்டும் வெளியிடப்பட்டுள்ளன. 

கம்பன் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டு அறிஞர்கள் கலந்துகொண்ட 'இலங்கையின்  தலைமை வீரன் என்னும் தகுதிக்கு பெரிதும் உரித்துடையவன் இந்திரசித்தனே! கும்பகர்ணனே! இராவணவே!' என்ற இலக்கிய ஆணைக்குழு என்ற பேச்சு அரங்கும் நடைபெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .