2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை மன்னாரில் நடாத்த மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் தெரிவித்தார்.

இவ்விழா தொடர்பில் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் மேலும் தெரிவிக்கையில்,

'எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2,3,4ஆம் திகதிகளில் இவ்விழா இடம்பெறவுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆய்வரங்கு, இலக்கிய அரங்கு, கலையரங்கு என மூன்று அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இவ் ஆய்வரங்குகள் தனிநாயகம் அடிகளாரின் பரந்துபட்ட தமிழ்ப் பணிகளை ஆய்வுநோக்கில் அணுகும் வகையில் இடம்பெறும்.

இவ்விழாவின்போது, நூற்றாண்டு விழா மலர் ஒன்றும் வெளியிடப்படும். இவ்விழா தொடர்பாக பல உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிதிக்குழு, ஆய்வரங்கக்குழு, மலர்க்குழு, இலக்கியக்குழு, கலைக்குழு, விளம்பரக்குழு, உபசரணைக்குழு என்பன அவற்றில் சிலவாகும்.

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி மன்னார் நகரில் அடிகளாரின் சிலையை நிறுவுவதற்கும் மன்னார் தமிழ்ச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மன்னாரில் உள்ள பாடசாலைகள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், மத அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று இவ்விழாவை பெருவிழாவாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது' என மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X