2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'மண்முனை இராணி உலக நாச்சி வடமோடிக்கூத்து' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஓய்வுபெற்ற அதிபரான கதிர்காமப்போடி கனகநாயகம் எழுதிய 'மண்முனை இராணி உலக நாச்சி வடமோடிக்கூத்து' நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக கலை பீடாதிபதி எம்.செல்வராசா, பேராசிரியர் எஸ்.மௌனகுரு, தொல்லியல் ஆய்வாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான செல்வி கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் நயவுரையை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்விப் பணி;பபாளர் ஞா.சிறிநேசன் ஆற்றினார்.

இதன்போது இந்நூலாசிரியர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

சுமார் கி.மு 4ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் அப்போது மண்முனை என்னும் இடத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி உலக நாச்சி என்னும் அரசியின் வரலாற்றைக் கூறும் கதையை வடமோடிக்கூத்தாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X