2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'விடியலுக்காய்' இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


'விடியலுக்காய' சிறுவர்களின் குரல் எனும் இறுவெட்டு வெளியீடு இன்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

'சிறுவர்களே எதிர்கால உலகம்' எனும் தொனிப் பொருளில் சிறுவர் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாதுகாப்பு தொடர்பாகவும்; மற்றும் மருவிவரும் தமிழ் சிறுவர்களின் பாரம்பரிய கலை, கலாசார விளையாட்டுக்களில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இவ் இறுவட்டு வெளியீடு நடைபெற்றது.

எஸ்கோ மற்றும் வோர் சயில்ட் ஹோலண்ட் நிறுவனங்களின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, வோர்
சயில்ட் ஹோலண்ட் இலங்கைக்கான பிரதிநிதி மரினா டோரிஸ், வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு வலைய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிரான், வாழைச்சேனை, வாகரை பிரதேச சிறுவர்களின் ஆக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய ஏழு பாடல்கள் இந்த இறுவெட்டில் பதிவுசெய்யப்பட்டிருந்தன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X