2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான நடமாடும் நாட்டுக்கூத்து பாசறை

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் நாட்டுக்கூத்து மற்றும் மேடை நாடகங்கள் போன்ற கலைகளை பாடசாலை மாணவர்களிடைய ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் நாட்டுக்கூத்து பாசறையொன்று நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

நாடளாவியர ரீதியில் செயற்பட்டுவரும் நாடக குழுவொன்று இப்பாசறையை ஒழுங்கு செய்திருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இவ்வாறான நாட்டுக் கூத்து மற்றும் மேடை நாடகங்கள் போன்ற கலைகள் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்காமல் போனது.

தற்போது நாட்டில் சுமுகமான ஒரு சூழ்நிலை காணப்படுவதனால் பாடசாலை மாணவர் மத்தியில் இந்த நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X