2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கல்முனை பிரதேச செயலாளர் எழுதிய இரு நூல்கள் வெளியீடு

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல். அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மது தம்பி முஹம்மது நௌபல் எழுதிய பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் (பொதுமக்களுக்கு அவசியமான ஒரு வழிகாட்டி) மற்றும் மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின் வரலாறு ஆகிய இரு நூல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வு மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கவிஞரும் நிர்வாக உத்தியோகத்தருமாகிய எம்.வீ. அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் -  மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, விரிவுரையாளர் சத்தார் எம். பிர்தௌஸ், அதிபர் ஏ.ஆர்.ஏ. நிஹ்மத்துல்லா, ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் ஆகியோர் இந்த நூல்கள் பற்றிய கருத்துரைகளை வழங்கியதுடன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலைத்துறை சார் ஆர்வளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X