2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்படும் இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பெண்களுக்கும் நாளை வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆண்களுக்குமாக இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் றிஸானா நபீக்கின் குடும்பத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் வெளியீட்டு விழாவில் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹியின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

நூலின் முதற்பிரதி பெண்களுக்கான நிகழ்வில்; றிஸானாவின் தாயார் றிஸினாவிடமும் ஆண்களுக்கான நிகழ்வில்; றிஸானாவின் தந்தை நபீக்கிடமும் வழங்கி வைக்கப்படும்.

இந்த வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் நிதியினை றிஸானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X