2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'விரல்களற்றவனின் பிரார்த்தனை'

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'விரல்களற்றவனின் பிரார்த்தனை' சிறுகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 03.03.2013 ஞாயிறு பி.ப. 4.30இற்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மூத்த கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ப.க.மகாதேவா தமிழ்வாழ்த்துப் பாட, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவன் எம்.ஏ.ஏ.எம். அஹ்ஸன் அலி வரவேற்புரை நிகழ்த்துவார். முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாகவும் வத்தளை மாபோளை நகரசபைத் தலைவர் ஏ.எச்.எம். நௌஷாத் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளும் இவ்விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொள்ளும் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் - நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

நூல் பற்றிய கருத்துரைகளை எழுத்தாளர் மு.தயாபரன் மற்றும் ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் ஆகியோர் நிகழ்த்த, வாழ்த்துரையை மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளர் எம்.எம்.பீர்முஹம்மத் வழங்குவார்.

நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்பாளர் ஏ.எம்.தாஜ் தொகுத்து வழங்கவுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • முஸ்டீன் Thursday, 28 February 2013 07:11 PM

    வாழ்த்துக்கள். அஷ்ரப் நாநா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X