2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'மௌன மொழிகள்' நூல் அறிமுக விழா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


யாழரசு எழுதிய மௌன மொழிகள் நூலின் அறிமுக விழா  வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரனும் முதன்மை விருந்தினராக சிறிடெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தனும் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு.அன்னமலரும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் இ.நித்தியானந்தனும்  விசேட அழைப்பாளர்களாக வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலின் ஆய்வுரையினை ஆசிரிய நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரனும் நன்றியுரையினை யாழரசு த.தர்ஸனும் ஆற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • danish Sunday, 24 February 2013 03:34 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X