2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவும் பரிசளிப்பும்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரின்; நூற்றாண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.

கிளிநொச்சித் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி பொன்விழா மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர் ம.பத்மநாதன் தலைமையில் இந்த விழாக்கள் நடைபெற்றன.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு அலுவலர் மா.அருள்சந்திரன் 'தனிநாயகம் அடிகளின் தமிழ்த்தொண்டு' என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார்.

ஈழத்தில் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் கடந்த நூற்றாண்டிலே தமிழ்ப் பணியை ஆற்றியதில் முக்கியமானவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணியை தமிழகமே கண்டு வியந்தது. ஈழத்தமிழுக்கு தனியான சிறப்பு அடையாளத்தை உருவாக்கியதில் தனிநாயகம் அடிகளின் பங்கு முக்கியமானது. ஈழத்திலே தமிழறிஞர்களின் செயற்பாடுகளை உலகம் அறிந்து கொள்வதற்கு உதவியவர் தனிநாயகம் அடிகள் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் தொடக்க உரையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  ரூபவதி கேதீஸ்வரன் ஆற்றினார். கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், கிளிநொச்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.இதயராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இறுதியில் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்மொழி ஆக்கத்திறன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X