2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் வெளியீடு

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி

'ரிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' எனும் புத்தகத்தை காத்தான்குடி மீடியா போரம் வெளியிடவுள்ளது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி  வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவுள்ள இந்த புத்தகத்தில் ரிஸானாவிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றில் வெளியான ஆக்கங்கள், கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை தொகுத்தே இந்த நூல் வெளியிடப்படுகின்றது.

கட்டுரை எழுதியவரின் பெயர் மற்றும் கட்டுரை வெளியிட்ட ஊடகம் அவற்றையும் குறிப்பிட்டே இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தினால் பெறப்படும் சகல வருமானங்களும் ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .