2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

யாழில் தீம்தனனா நடன நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடத்திய 'தீம் தனனா...ஐஐ' பரதநாட்டிய நிகழ்வு யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது, திருமறைக்கலாமன்ற மாணவர்கள்  தீம்தனனா, தில்லானா போன்ற நான்கு நடனங்களை வழங்கினர்.

இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கத்தின் ஏற்பாட்டில், இந்திய அரசின் கலாசார அமைச்சினால் இந்நடன நிகழ்வு ஒழுங்க செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற இயக்குனர் மற்றும் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் நடன மாணவர்களின் பெற்றோர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X